Home கலை உலகம் வடிவேலு நடித்த ‘எலி’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

வடிவேலு நடித்த ‘எலி’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

504
0
SHARE
Ad

Eliசென்னை, மே 27 – வடிவேலு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “எலி”. தணிக்கைக்குழு (சென்ஸார்) பார்வைக்குச் சென்ற இப்படம் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது. வடிவேலுவின் முந்தைய படமான ‘தெனாலிராமன்’ இயக்கிய யுவராஜ் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சதா நாயகியாக நடித்திருக்கிறார். படத்திற்கு இசை வித்யாசாகர்.

இந்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி படம் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்தன.  இதைப் பற்றி ‘எலி’ படக்குழுவிடம் கேட்ட போது,

#TamilSchoolmychoice

“தற்பொழுது தான் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கிறோம். அடுத்து வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும். வரிவிலக்கு பெற்ற பின்னரே படத்தின் தேதி திட்டவட்டமாக முடிவாகும்” என்று கூறினர்.

வடிவேலு இப்படத்தில் ரகசியக் காவலராக நடிக்கிறார். திருடர் கும்பலில் நுழைந்து குற்றவாளிகளை  ‘எலி’ போல் (வடிவேலு) பிடிப்பதை நகைச்சுவையுடன் உருவாகியிருக்கும் படமே ‘எலி’.  60-களில் நடக்கும் கதை என்பதால் முழுக்க முழுக்கத் தோட்டா தரணியின் கலையில் உருவாகியிருக்கிறது.