Home உலகம் ஒபாமாவின் மகளை மணமுடிக்க 50 மாடுகள், 70 ஆடுகள் பேரம் – கென்யா வழக்கறிஞர்!

ஒபாமாவின் மகளை மணமுடிக்க 50 மாடுகள், 70 ஆடுகள் பேரம் – கென்யா வழக்கறிஞர்!

621
0
SHARE
Ad

11357030_998379976848161_8186371785887495836_oநியூயார்க், மே 28 – கென்யாவை சேர்ந்த வழக்கறிஞர் கிப்ரோனோ என்பவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகளை 7 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தி நைரோபி’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “2008-ஆம் ஆண்டு முதன் முதலாக ஒபாமாவின் மகள் மலியாவை(16) பார்தேன், அன்று முதல் அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்”.

“என் வாழ்க்கையில் எந்த பெண்ணையும் காதலித்ததில்லை, அதனால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருப்பேன். மேலும் இது தொடர்பாக அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுத இருக்கிறேன்”.

#TamilSchoolmychoice

“அத்துடன் கென்யா வரும்போது மலியாவை அழைத்துவருமாறு ஒபாமாவிடம் வலியுறுத்த உள்ளேன். அப்படி நான் மலியாவை சந்தித்தால், பாரம்பரிய முறைப்படி எனது காதலை அவரிடம் வெளிப்படுத்துவேன்”.

11295591_998377736848385_6928365146862334923_n“திருமணத்துக்கு பின்னர் மலியாவுக்கு பால் கறக்கவும், சோளக் கஞ்சி செய்யும் கெலேஞ்சின் பெண்களின் பாரம்பரியம் குறித்தும் கற்றுக் கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அதிபர் ஒபாமாவுக்கு 50 மாடுகள், மற்றும் 70 ஆடுகளை தருகிறேன் என்று கூறியுள்ளார். ஒபாமா மகளின் செல்வாக்கை கொண்டு அவர் மீது காதல் கொண்டீர்களா? என்ற கேள்விக்கு, மலியாவுடன் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவதாக கிப்ரோனோ தெரிவித்துள்ளார்.