Home இந்தியா ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 70 லட்சம் கோழிகள் பலி!

ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 70 லட்சம் கோழிகள் பலி!

626
0
SHARE
Ad

Poltry-Farmஐதராபாத், மே 28 – ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரு வாரங்களாக வெயிலுக்கு பண்ணைகளில் இதுவரை 70 லட்சம் கோழிகள்  பலியாகியுள்ளன.

இதனால், பண்ணை உரிமையாளர்களுக்கு ஏறக்குறைய ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மூன்றாவது  மிகப்பெரிய கோழிப்பண்ணை வளர்ப்புப் பகுதியாக தெலங்கனா, ஆந்திரா மாநிலங்கள் விளங்குகின்றன.

#TamilSchoolmychoice

இங்குள்ள கோழி பண்னைகளின் மொத்த  மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடியாகும். ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைக்கோழி, கறிக்கோழி பண்ணைகளும் உள்ளன.

இதில்  ஆந்திராவில் 7 கோடி கோழிகளும், தெலங்கானாவில் 6.5 கோடி கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து வடமாநிலங்களுக்கு அதிக அளவு  விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

article-2617393-1D7C865B00000578-841_964x503இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக இந்த மாநிலங்களில் வெயிலின் தாக்கம் 120 டிகிரி அளவுக்கு உள்ளது. இதனால்,  பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் வெப்பத்தை தாங்க முடியாமல், கூட்டம் கூட்டமாக பலியாகி வருகின்றன.

கோடை காலத்தில்  கோழிகள் இறப்பு 3 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு வெப்பத்தின் அதிகரிப்பால் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து,  தெலங்கானா கோழிப்பண்ணை அமைப்பின் தலைவர் ஜி.ரஞ்சித் ரெட்டி கூறுகையில்; “கடந்த இருவாரங்களாக வெயில் 120 டிகிரியைத் தாண்டியுள்ளது.

இதனால், கோழிகளை பாதுகாக்க முடியவில்லை. இருவாரங்களில் ஏறக்குறைய 70 லட்சம் கோழிகள் இறந்துள்ளன. ரூ.100 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.