இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வான் ஜூனைடி, “12 பேரில் இரண்டு பேர் மட்டுமே கள்ளக் குடியேறிகள் கடத்தலில் தொடர்பு கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் பொருட்கள் கடத்தலில் தொடர்பு உள்ளவர்கள் ” என்று தெரிவித்துள்ளார்.
பாடாங் பெசார் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இத்தகைய 27 தடுப்பு முகாம்களையும், 139 சவக் குழிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments