Home உலகம் சவுதி இளவரசருக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலரில் ஆடம்பர விமானம்!

சவுதி இளவரசருக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலரில் ஆடம்பர விமானம்!

565
0
SHARE
Ad

x27-1432716833-prince-alwaleed-bin-talal.jpg.pagespeed.ic.ylzWubD-3aசவுதி அரேபியா, மே 28 – சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் செய்திகளில் பரபரப்பாக எழுதப்பட்டன.

உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின.

அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய நாட்டின் இளவரசரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ‘அல் வாலீத் பின் தலாலு’க்கு அந்த விமானம் முன்பதிவு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.

இந்த விமானத்தில் சாதாரன இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவுதி இளவரசர் தனது குடும்பத்தினர், சகாக்கள் மற்றும் வர்த்தக நண்பர்களுடன் பயணிக்கும் வகையில், சகல வசதிகளுடன் மாற்றப்பட்டது.

pic-11.jpg.pagespeed.ic.kmJRjogJwjவிமானத்தில் சவுதி இளவரசரின் ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுத்துவதற்காக பிரத்யேக இட வசதியுடன் செய்யப்பட்டது. இதன்மூலம், காரில் நேரடியாக விமானத்திற்குள்ளேயே வந்து இறங்க முடியும்.

ஏர்பஸ் ஏ380 விமானத்திற்குள் ஆடம்பர வசதிகளுடன் கட்டமைப்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ‘டிசைன் க்யூ’ என்ற பிரபல நிறுவனத்தை சவுதி இளவரசர் அல் வாலீத் நியமித்தார். அந்த நிறுவனம்தான் விமானத்தை வடிவமைக்கும் பொறுப்புகளை ஏற்றது.

உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்கான 2 பிரம்மாண்ட படுக்கையறைகள், அதனுடன் இணைந்த குளியலறைகள், 20 விருந்தினர்கள் தங்குவதற்கான படுக்கை வசதிகள், கூட்ட அரங்கம், பொழுதுபோக்கு அரங்கம், சாப்பாட்டுக் கூடம் என்று ஆடம்பரத்தின் உச்சமாக ஒரு ஐந்த நட்சத்திர விடுதிக்கு இணையாக இதனை உருவாக்கினர்.

pic-06.jpg.pagespeed.ic.PCS4jKZiFFவிமானத்தில் தொழுகைக்கான இடத்தில் இளவரசர் அமரும் தரைவிரிப்பு எந்த நேரமும் மெக்காவை நோக்கி இருக்கும் வகையில், கணினி முறையில் கட்டுப்படுத்தும் வசதி கொண்டது.

இந்த விமானம் பறந்து கொண்டிருக்கும்போது வெளிப்புறத்தில் இருக்கும் சூழலை அப்படியே திரையில் பார்க்க முடியும். இந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுடன் கட்டமைப்பதற்கு 3 ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அல் வாலீத்திடம் பல விமானங்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்.

அவரிடம் போயிங் 747, ஹாக்கர் ஜெட், ஏர்பஸ் ஏ321 போன்ற தனிநபர் பயன்பாட்டு விமானங்கள் சொந்தமாக உள்ளன. உலகின் மிகவும் விலையுயர்ந்த ஆடம்பர படகும் உள்ளது.