Home நாடு நீடிக்கும் தேடுதல் வேட்டை: மாடத்தில் உடலுறவு கொண்ட ஆடவர் தப்பினாரா?

நீடிக்கும் தேடுதல் வேட்டை: மாடத்தில் உடலுறவு கொண்ட ஆடவர் தப்பினாரா?

654
0
SHARE
Ad

Balconyகோலாலம்பூர், மே 29- அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டின் மாடத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட வெளிநாட்டு ஆடவர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் காவல்துறை இதை உறுதி செய்யவில்லை.

அண்மையில் தெற்கு பங்சாரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டின் மாடத்தில் அக்குறிப்பிட்ட ஆடவர் உடலுறவு கொள்ளும் 30 நிமிட காணொளிப் பதிவு இணையத்தில் வெளியானது.

இதையடுத்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அந்த ஆடவர் வெளிநாட்டவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு வலை வீசப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அந்த ஆடவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
“வெளிநாட்டவர்கள் மலேசியாவில் அதிகபட்சமாக ஒரு மாதம் தங்கியிருக்கலாம்.எனினும் அந்த ஆடவர் நாட்டை விட்டு வெளியேறினாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை,” என்று பிரிக்ஃபீல்ட்ஸ் தலைமை உதவி ஆணையர் முகமட் அஸ்லி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அந்த ஆடவர் மலேசியாவில் தான் இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் கருதும் வேளையில், இத்தகவலை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்று காவல்துறை கூறுகிறது.

அந்த ஆடவர் வீட்டு மாடத்தில் உடலுறவு கொள்ளும் காணொளியை அண்டை வீட்டில் வசிக்கும் ஒருவர் பதிவு செய்துள்ளார். பின்னர் அவர் அந்தப் பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த வெளிநாட்டு ஆடவருடன், காணொளிக் காட்சியை பதிவு செய்த நபரும் காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார்.