வாஷிங்டன், மே 30 – அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆக்லாந்து நிறுவனம் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2015 ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் ஆய்வு நடத்தியது. ‘இலங்கை போருக்கு பின்னரும் நீதிக்காக போராட்டம்’ என்ற தலைப்பில் 39 பக்க அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், அங்கு தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் சிங்களர்கள்.
6 தமிழ் மக்களுக்கு ஒரு ராணுவவீரர் என்ற நிலை உள்ளது. தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் வீடுகள், ஆடம்பர சுற்றுலா விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவைகளை சிங்கள ராணுவத்தினர் கட்டியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்வதும், காணாமல் போவதும் இன்னும் தொடர்கிறது. தமிழர்களின் நிலங்களில் போர் வெற்றி சின்னங்கள் மற்றும் புத்த ஆலயங்களை கட்டி தமிழ் கலாசாரமும், வரலாறும் திட்டமிட்டே அழிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.