Home தொழில் நுட்பம் ‘ஐமெஸ்ஸேஜ்’ வழுவை சரி செய்வது எப்படி – ஆப்பிள் அறிவிப்பு !

‘ஐமெஸ்ஸேஜ்’ வழுவை சரி செய்வது எப்படி – ஆப்பிள் அறிவிப்பு !

557
0
SHARE
Ad

imessageகோலாலம்பூர், மே 31 – கடந்த சில நாட்களுக்கு முன்பு  ‘ஐமெஸ்ஸேஜ்’ (iMessage) வழியே ஊடுருவிய புதிய ‘வழு’ (Bug) தொடர்ச்சியாக ஐபோன்களை செயலிழக்கச் செய்தது. இந்த புதிய வழுவை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், இதுபற்றிய அனுபவங்களை முதன் முதலில் ‘ரெட்டிட்’ (Reddit) பயனர்களே சமூக ஊடகங்களில் ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த வழு, ஐமெஸ்ஸேஜ் வழியாக மட்டுமல்லாமல் ‘டுவிட்டர்’ (Twitter) மற்றும் ‘ஸ்நாப்சேட்’ (Snapchat) செயலிகள் வழியாகவும் ஐபோன்களுக்குள் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவதாக செய்திகள் வரத் துவங்கின.

இந்நிலையில் இந்த பாதிப்பை சரி செய்வது பற்றி ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த வழு பற்றி நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். அடுத்த மேம்பாடுகளில் இந்த வழுவினால் ஏற்படும் பாதிப்புகள் நீக்கப்படும். புதிய மேம்பாடு வெளியானவுடன் பயனர்கள் அதனை தங்கள் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.”

#TamilSchoolmychoice

“அதுவரை இந்த பாதிப்பில் இருந்து விடுபட, செயற்கை நுண்ணறிவு சேவையான ‘சிரி’ (Siri)-ஐத் திறந்து, அனைத்து குறுந்தகவல்களையும் ‘ரீட்’ (Read) என குறித்துக் கொள்ளுமாறு கூறவேண்டும். அதன் பின்னர் வழுவிற்கு பதில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த வழுவினால் பயனர்களின் தகவல்களுக்கு எத்தகைய பாதிப்புகளும் இல்லை என்றாலும், தன்னிச்சையாக ஐபோன்களை கட்டுப்படுத்தும் இந்த வழுவை போக்க வேண்டும் என்பதே ஆப்பிள் வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

சிரி உதவியுடன் ஐமெஸ்ஸேஜ் வழுவை சரி செய்வதற்கான காணொளியை கீழே காண்க: