Home நாடு காவல்துறையினரால் தேடப்பட்ட மாட் மலாயா அதிரடியாகக் கைது

காவல்துறையினரால் தேடப்பட்ட மாட் மலாயா அதிரடியாகக் கைது

677
0
SHARE
Ad

கோத்தாகினபாலு, ஜூன் 2 – சபா காவல்துறையினரால் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த முன்னாள் கூட்டரசு அமைச்சர் டத்தோஸ்ரீ நோ ஓமாரின் சகோதரர் மாட் மலாயா நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

Mohd Jusnaidi Omarகோத்தாகினபாலு மலையடிவாரம் அமைந்துள்ள குண்டாசாங் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த அவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

44 வயதான மாட் மலாயா தனது 24 வயது மனைவி மற்றும் இருமாத பெண் குழந்தையுடன் அங்கு தங்கியிருந்தார். கடந்த மே 6ஆம் தேதியன்று கோத்தாகினபாலுவில் வாகனங்களைப் பழுது பார்க்கும் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பேரில் மாட் மலாயாவை காவல்துறையினர் தேடி வந்தனர்.

#TamilSchoolmychoice

முகமட் ஜுஸ்னைடி என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. எனினும் கைதான போது அவரிடம் இருந்து எந்த ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை.

இதற்கு முன்பு கடந்த 2007ஆம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தொடர்பில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. எனினும் பின்னர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.