Home நாடு மாஸ் எம்.எச்-370 விமானத்தை தேடும் பணி 2016-இல் நிறுத்தப்படும் – ஆஸ்திரேலிய!

மாஸ் எம்.எச்-370 விமானத்தை தேடும் பணி 2016-இல் நிறுத்தப்படும் – ஆஸ்திரேலிய!

516
0
SHARE
Ad

pesawat-mas-misteri-hilang-mh370சிட்னி, ஜூன் 5 – மாயமான மலேசிய விமானம் எம்.ஏச்.370-ஐ தேடும் பணி 2016-இல் நிறுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா தலைமையிலான கூட்டு ஏஜென்சி மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 2014-ஆம் ஆண்டு காணாமல் போன இவ்விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியாவும், மலேசியாவும் ஈடுபட்டு வந்த போதிலும், விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

#TamilSchoolmychoice

தற்போது, 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ பரப்பளவில் தேடும் பணி நடைபெற்ற வரும் நிலையில் இனி வரும் காலங்களில் தேடும் பரப்பை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூட்டு ஏஜென்சி மையங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய தரப்பில் 80 மில்லியன் டாலர்களும், மலேசிய தரப்பில் 45 மில்லியன் டாலர்களும் செலவிடப்பட்டுள்ளன என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எவ்வித உறுதியான தகவலும் கிடைக்காத பட்சத்தில் விமானத்தை தேடும் பணி 2016-ஆம் ஆண்டு நிறுத்தப்படும் என, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இவ்விமானம் மாயமான போது அதில் 239 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.