Home இந்தியா சுலோச்சனா சம்பத் காலமானார்! ஜெயலலிதா நேரில் அஞ்சலி!

சுலோச்சனா சம்பத் காலமானார்! ஜெயலலிதா நேரில் அஞ்சலி!

603
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 7 – உடல் நலக் குறைவு காரணமாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் (படம்) நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 84. சில மாதங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்த அவர், கடந்த சில தினங்களாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Sulochana Sampath

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் காலமானார். சுலோச்சனா சம்பத் மறைவு செய்தியை அறிந்ததும், அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மதியம் சுலோச்சனா சம்பத் இல்லத்திற்கு வந்து சுலோச்சனா சம்பத் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

#TamilSchoolmychoice

சுலோச்சனா, தந்தை பெரியார் அவர்களின் அண்ணனின் மருமகளும் ஆவார்.

திமுகவின் ஆரம்ப காலங்களில், அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்ட, ஈ.வி.கே. சம்பத் அவர்களின் துணைவியார் சுலோச்சனா ஆவார்.

சுலோசனா சம்பத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயாரும் ஆவார்.