Home நாடு மெர்ஸ் வைரஸ்: தென்கொரியாவிற்குச் செல்ல வேண்டாம் என மலேசியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

மெர்ஸ் வைரஸ்: தென்கொரியாவிற்குச் செல்ல வேண்டாம் என மலேசியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

496
0
SHARE
Ad

mers-covகோலாலம்பூர், ஜூன் 8 – மத்திய கிழக்கு சுவாச நோய் கோரோனா வைரஸ் (Middle East Respiratory Syndrome coronavirus- MERS-CoV) என்ற வைரஸ் தென் கொரியாவில் பரவியுள்ளதால் தற்காலிகமான அந்த நாட்டிற்கு மலேசியர்கள் செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

என்றாலும், அந்த நாட்டிற்குச் செல்வதை தடுக்கவோ அல்லது அங்கிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிக்கவோ அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் துணை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹில்மி யாஹா தெரிவித்துள்ளார்.

“நமது அனைத்துலக விமான நிலையங்கள் கவனிக்கப்பட்டு வருகின்றன. அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் யாருக்கேணும் காய்ச்சல் இருக்குமானால் உடனடியாக அவர்கள் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” என்று நேற்று “உலக புகையிலை ஒழிப்பு தினம்” விழாவில் ஹில்மி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் காய்ச்சல் இல்லாவிட்டாலும், உடலில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 2 -ம் தேதி முதல் தென் கொரியாவில் மெர்ஸ் – கோவி 41 பேருக்கு தாக்கியுள்ளதாகவும் அதில் 4 பேர் மரணமடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.