அவர்கள் நான்கு பேரையும் 4 நாட்கள் காவலில் வைக்கும் படி ரணாவ் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி டிசுல் எல்மி உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணி அளவில் அவர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
மேலும், அவர்கள் மீது குற்றவியல் சட்டப்பிரிவு 294 (ஏ) -ன் கீழ் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குத் தேவையானால் தடுப்புக்காவலை நீடிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
காலை 11.10 மணியளவில் அவர்கள் நால்வரும் கராமுனுசிங் காவல்நிலையத்தில் கைகளில் விலங்கிடப்பட்டு, சிறை உடை அணிந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
டச்சு நாட்டவர் மற்றும் சகோதரிகள் இருவரும் நேற்று மாலை 6 மணியளவில் கராமுனுசிங் காவல்நிலையத்தில் சரணடைந்தனர் என்றும், பிரிட்டிஷ் நாட்டவர் நேற்று தவாவில் வைத்து கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.