Home வணிகம்/தொழில் நுட்பம் மேகிக்கு மேலும் சிக்கல்  – மாதிரிகளைப் பரிசோதனை செய்கிறது அமெரிக்கா!

மேகிக்கு மேலும் சிக்கல்  – மாதிரிகளைப் பரிசோதனை செய்கிறது அமெரிக்கா!

447
0
SHARE
Ad

anushree_maggi-Chicken_3வாஷிங்டன், ஜூன் 12 – இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்த மேகி நூடுல்ஸ் விவகாரத்தில், நூடுல்ஸில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அலுமினியம் என்ற வேதிப்பொருளும், காரீயமும் கலந்து இருப்பதாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்ட இந்திய மாநிலங்கள், ஒவ்வொன்றாக மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கத் தொடங்கின. இதனால் நெஸ்லே நிறுவனம், பிரச்சனைகள் ஓயும் வரை தனது வர்த்தகம் மற்றும் தயாரிப்பை ஒட்டுமொத்தமாக நிறுத்தியது. இந்நிலையில் தான் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இச்சோதனையை மேற்கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி நெஸ்லே நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அமெரிக்காவில் மேகி நூடுல்ஸ் உற்பத்தி அல்லது நேரடி விற்பனையில் நாங்கள் ஈடுப்படவில்லை. சில்லறை வர்த்தகம் மற்றும் மூன்றாம் நபர் மூலமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியாவைத் தொடர்ந்து நேபாளமும், சிங்கப்பூரும் மேகிக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.