Home இந்தியா மருத்துவர்கள் இனி மருந்துப் பெயர்களைக் ‘கேபிடல்’ எழுத்தில் தான் எழுத வேண்டும்!

மருத்துவர்கள் இனி மருந்துப் பெயர்களைக் ‘கேபிடல்’ எழுத்தில் தான் எழுத வேண்டும்!

638
0
SHARE
Ad

????????????புதுடில்லி, ஜூன் 12- எளிதில் புரியாதபடி படுகிறுக்கலாக இருக்கும் கையெழுத்தை ‘டாக்டர் கையெழுத்து போல இருக்கிறது’ எனக் கிண்டல் செய்வது வழக்கம்.

ஏனெனில், மருத்துவர்கள் புரியாத கையெழுத்தில் தான் மருந்துச் சீட்டு  எழுதித் தருகிறார்கள்.

ஒருவேளை மருத்துவப் படிப்பிலேயே அப்படி எழுதத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டதோ என்றுகூட சிலருக்குச் சந்தேகம் ஏற்படுவதுண்டு.

#TamilSchoolmychoice

கிறுக்கல் கையெழுத்தை டாக்டர் கையெழுத்து என்று கேலி செய்தாலும், கிறுக்கலாக மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளின் பெயர்கள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு,வேறு மருந்துகள் கொடுக்கப்பட்ட விபரீதமும் நடந்திருக்கிறது.

எனவே, மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டில்,  மருந்துப் பெயர்களை இனி கேபிடல் (கொட்டை) எழுத்தில்தான் எழுதித் தர வேண்டும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வரப் பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத் துறை அமைச்சகம் விரைவில் ஓர் அரசாணையைப் பிறப்பிக்க உள்ளது.

இதில், மருத்துவர்கள் மருந்தின் பெயர்களைக் கேபிடல் எழுத்தில் எழுத வேண்டும் என்பதோடு, மருந்தில் சேர்க்கப்படும் மருந்துப் பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என்று ஆணையிட உள்ளது.