வட அமெரிக்கா,ஜூன் 12- உணவுப் பொருட்கள் வேண்டும் என்றால், அதற்குப் பண்டமாற்றாகப் பெண்கள் பாலுறவில் ஈடுபட்ட வேண்டும் என்ற வக்கிரச் சம்பவத்தில் வட அமெரிக்க அமைதிப்படை வீரர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
வடஅமெரிக்க நாடான ஹைத்தியில் உள்ள கிராமப்புறங்களில் உணவு, உடை, தண்ணீர், குழந்தைகளுக்கான வசதிகள் எனப் பல அத்தியாவசியத் தேவைகளை ஐ.நா. அமைதிப்படை கடந்த2000 ஆம் ஆண்டிலிருந்து அளித்து வருகிறது.
அவர்களது பணியைக் கண்காணிக்கும் பொறுப்பில் ஐ.நா. மேற்பார்வை குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், உணவு, உடை, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு ஈடாகக் கிராமத்துப் பெண்கள் தங்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும் என்று அமைதிப்படை வீரர்கள் கட்டாயப்படுத்தியதைக் கண்காணிப்புக் குழு கண்டுபிடித்து உள்ளது.
கடந்த 2008 முதல் 2013-ஆம் ஆண்டு வரை மட்டும் 480 பண்டமாற்றுப் பாலுறவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இது தொடர்பான அறிக்கையை ஒரு சில மாதங்களில் ஐ.நா. வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.