Home கலை உலகம் ஆர்யாவைத் தொடர்ந்து சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ளும் விஷால், வெங்கட் பிரபு!

ஆர்யாவைத் தொடர்ந்து சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ளும் விஷால், வெங்கட் பிரபு!

746
0
SHARE
Ad

arya.jpg,சென்னை, ஜூன் 15 – சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்தாலும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆர்யா. கடந்த ஒருவருடமாகச் சைக்கிள் ஓட்டும் பயிற்சியைத் தீவிரமாகச் செய்துவந்த ஆர்யா, ‘வாடேர்ன் ருன்டன் ரேஸ்’ என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டின் மோட்டலா என்ற ஊரில் நடந்து வரும் போட்டியில் கலந்துகொண்டார்.

அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்க்காற்று எனப் பல்வேறு சவால்களைக் கடந்து 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும்.

ru17peஇந்தப் பந்தயத்தில் கலந்துகொண்ட ஆர்யா, வெற்றிகரமாக 300 கி.மீ. தூரத்தைக் கடந்து பரிசு வென்றுள்ளார். இவருக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஆர்யாவின் நண்பரான விஷால் ஆர்யாவுக்கு வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

72-600x300அதற்குப் பதிலளித்த ஆர்யா நன்றி தெரிவித்துப் பின்னர், அடுத்த வருடம் என்னுடன் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு விஷாலும் கண்டிப்பாகக் கலந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதேபோல், இயக்குநர் வெங்கட் பிரபுவையும் ஆர்யா சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டதற்கு, அவரும் சம்மதம் சொல்லி, ஆர்யாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.