Home நாடு ஜோகூர்: 6000 டன் ரோன்95 எண்ணெய், 22 ஊழியர்களுடன் வந்த கப்பல் மாயம்!

ஜோகூர்: 6000 டன் ரோன்95 எண்ணெய், 22 ஊழியர்களுடன் வந்த கப்பல் மாயம்!

743
0
SHARE
Ad

tanker_shippஜோகூர் பாரு, ஜூன் 15 –  ஜோகூர் பாருவில், 6000 டன் ரோன்95 எண்ணெயுடன் வந்த கப்பலைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது. அக்கப்பலில் 16 மலேசியர்கள், 5 இந்தோனேசியர்கள் மற்றும் 1 மியான்மர் நாட்டவர் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் அண்டை நாடுகள் உட்பட கடலில் காணாமல் போன எண்ணெய்க் கப்பலைத் தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.

எம்டி ஓர்கிம் ஹார்மோனி என்ற கப்பல் மலாக்காவிலிருந்து குவாந்தானுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் மாயமாகியுள்ளதாக மலேசிய கடற்படை செயல்பாட்டு அமைப்பு (எம்எம்இஏ) அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடைசியாக அக்கப்பல், கடந்த வாரம் வியாழக்கிழமை  இரவு 8.50 மணியளவில், தாஞ்சோங் செடிலியின் கிழக்கே 30 கடல் மைல் தொலைவில் தொடர்பில் இருந்துள்ளது. அதன் பின்னர் திடீரெனத் தொடர்பில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.