Home இந்தியா திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் சாமி தரிசனம்!

திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் சாமி தரிசனம்!

693
0
SHARE
Ad

rush-photo2திருமலை, ஜூன் 15 – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இதில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆந்திராவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் கடந்த மாதத்தில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை லட்சக்கணக்கில் இருந்தது.

கடந்த 1-ஆம் தேதி முதல், பக்தர்கள் கூட்டம் சற்றுக் குறைந்திருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை 1 லட்சத்து 719 பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.

#TamilSchoolmychoice

tirupathi_2265436fஒரே நாளில் இவ்வளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை முதல் மாலை 6 மணி வரை 66,659 பேர் தரிசனம் செய்தனர்.

ஏழுமலையான் கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. நேற்று ஒரே நாளில் பக்தர்கள் ரூ.3 கோடியே 15 லட்சத்தைச் செலுத்தியுள்ளதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.