Home கலை உலகம் பிரிந்து போன சமந்தாவும் சித்தார்த்தும் ஒன்று சேர்கிறார்கள்!

பிரிந்து போன சமந்தாவும் சித்தார்த்தும் ஒன்று சேர்கிறார்கள்!

1187
0
SHARE
Ad

Siddharth-and-Samanthaசென்னை,ஜூன் 16- படத்தின் விளம்பரத்திற்காகத் தமிழ்ச் சினிமாக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் உண்மையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது போல் தமிழகம் முழுக்கச் சுவரொட்டி ஒட்டி பரபரப்பைத் தூண்டினார்கள். பின்பு ‘அது  சும்மா சினிமாக் கல்யாணம்; ராஜா ராணிப் பட விளம்பரம்’ என்று சொல்லிச் சிரித்தார்கள்.

அடுத்து, நயன்தாரா- சிம்பு ஜோடிக்கு வியாபார மதிப்பு (commercial value) இருப்பதை வைத்து இருவரையும் வம்படியாய் ஒன்று சேர்த்து, ‘இது நம்ம ஆளு’ என்று படத்திற்குப் பேரும் வைத்து, இரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பினார்கள். படம் பாதியிலேயே நின்று போய்விட்டது.

#TamilSchoolmychoice

இப்போது அதே பாணியைச் சுந்தர்.சி-யும் கையில் எடுத்திருக்கிறார். ஒன்றாகக் குடித்தனம் நடத்திவிட்டுப் புரிதல் இல்லாமல் பிரிந்து சென்றுவிட்ட சமந்தாவையும் சித்தார்த்தையும் ஜோடி சேர்த்து ஒரு படம் எடுக்கப் போகிறாராம்.

அவர் எடுக்கும் பேய்ப் படம் பகுதி 2-க்கு இந்த  இருவரும் தான் ஜோடியாம்!