Home நாடு எண்ணெய்க் கப்பல் மாயம்: 13 கப்பல்கள், 8 விமானங்கள் தீவிரத் தேடுதல் வேட்டை!

எண்ணெய்க் கப்பல் மாயம்: 13 கப்பல்கள், 8 விமானங்கள் தீவிரத் தேடுதல் வேட்டை!

643
0
SHARE
Ad

Orkimகோலாலம்பூர், ஜூன் 17 – மாயமான எம்டி ஆர்கிம் ஹார்மோனி என்ற எண்ணெய்க் கப்பலைத் தேடி 13 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

நேற்று முதல் மலேசியக் கடலோர காவல்படையைச் சேர்ந்த 5 போர் விமானங்களும், வான்படையைச் சேர்ந்த 2 விமானங்களும், 1 கடற்படை விமானமும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இது குறித்து கடலோரக் காவல்படையின் துணை அட்மிரல் டத்தோ அகமட் புசி அபு பக்கார் கூறுகையில், மலாக்கா நீரிணையில் இருந்து சபா, சரவாக் கடற்பகுதிகள் வரை தேடுதல் வேட்டை நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த எண்ணெய்க் கப்பல் சுமார் 5,879  டன் எடையுள்ள ரோன் 95 எண்ணெய்யும், 22 பணியாளர்களுடனும் காணாமல் போய் உள்ளது. அதன் மதிப்பு 21 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்றும் அகமட் புசி தெரிவித்துள்ளார்.

அக்கப்பல் கடத்தப்பட்டிருக்கலாமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அகமட் புசி, அப்படிக் கடத்தப்பட்டிருந்தால், கடத்தல்காரர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வந்திருக்கும். நேற்று வரை எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை என்றும் அகமட் புசி தெரிவித்துள்ளார்.