Home இந்தியா மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடும் பணியில் தொடர்ந்து சிக்கல்!

மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடும் பணியில் தொடர்ந்து சிக்கல்!

750
0
SHARE
Ad

stock-footage-view-of-the-propeller-from-the-bottom-of-the-ship-under-waterசென்னை, ஜூன் 22-  நீர்மூழ்கிக் கருவி எடுத்த படங்கள் தெளிவாக இல்லாததால், மாயமான விமானத்தைத் தேடும் பணியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி புறப்பட்டுச் சென்ற இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ‘டோர்னியர்’ விமானம் 3 விமானிகளுடன் மாயமாய் மறைந்து 14 நாட்கள் ஆகிவிட்டன.

அந்த விமானம் சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்திருப்பது கண்டறியப்பட்டது.

#TamilSchoolmychoice

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிநவீன பல்நோக்கு ஆராய்ச்சிக் கப்பலான ‘ஒலிம்பிக் கேன்யான்’ அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் படம் எடுத்து அனுப்பி வருகிறது.

இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல் படை அதிகாரி கூறியதாவது:-

“ஒலிம்பிக் கேன்யான் கப்பலில் உள்ள ‘ரிமோட்லி ஆபரேட்டிங் வெசல்’ என்ற நவீனக் கருவியில் உள்ள எக்கோ சவுண்டர் என்ற எதிரொலிக் கருவி, நீர்மூழ்கி ஒளிப்படக் கருவி, ஒளி வெள்ள விளக்குகள், காணொளி படப்பிடிப்புக் கருவிகள் மூலம் ஆழ்கடலில் இருண்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், அவை தெளிவாக இல்லை.

சிறிய அளவில் சில சமிக்ஞைகளும் கிடைக்கின்றன.ஆனால், இதனை வைத்து மாயமான விமானத்தில் இருந்து தான் இந்தச் சமிக்ஞை வருகிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஓரிரு நாட்களில் இவை உறுதிப்படுத்தப்படும்” என்றார் அவர்.

இத்தனை நவீனக் கருவிகள் இருந்தும், அந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையென்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.