Home கலை உலகம் ‘காக்கா முட்டை’ சிறுவர்களின் குடும்பத்தைத் தத்தெடுத்தது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்!

‘காக்கா முட்டை’ சிறுவர்களின் குடும்பத்தைத் தத்தெடுத்தது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்!

645
0
SHARE
Ad

kakaசென்னை, ஜூன் 23- காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் குடும்பத்தை அப்படத்தைத் தயாரித்த  பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தத்தெடுத்துள்ளது.

நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம்’ சார்பில் தயாரித்து வெளியிட்ட, ‘காக்கா முட்டை’ படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் வசூல் குவிந்து வருகிறது.

இந்தப் படத்தில் நடித்த விக்னேஷ்,ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

#TamilSchoolmychoice

இதையடுத்து இந்தச் சிறுவர்களின் கல்விக்கான செலவுகளைத்  தனுஷ், வெற்றிமாறன் இருவரும் ஏற்றனர்.

இப்போது, விக்னேஷ், மற்றும் ரமேஷ் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்கான அனைத்துச் செலவுகளையும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனைப் பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சிங் தெரிவித்துள்ளார்.