Home உலகம் ரேடாரில் கோளாறு: நியூசிலாந்து நாட்டில் விமான சேவைகள் பாதிப்பு!

ரேடாரில் கோளாறு: நியூசிலாந்து நாட்டில் விமான சேவைகள் பாதிப்பு!

456
0
SHARE
Ad

Air_New_Zealandவெலிங்டன், ஜூன் 23 – தெற்கு பசிபிக் நாடுகளுக்கான வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறையில் கோளாறு ஏற்பட்டதால் நியூசிலாந்து நாட்டில் விமான சேவைகள் முற்றிலுமாக முடங்கியது.

அந்நாட்டு நேரப்படி மதியம் 2.48 மணியளவில் வான் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ரேடார் செயலிழந்ததாகக் கூறிய ஏர்வேஸ் நியூசிலாந்து செய்தித் தொடர்பாளர், இக்கோளாறு எப்போது சரியாகும் எனத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி அனைத்து விமானங்களும் பல்வேறு விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,

#TamilSchoolmychoice

வானில் பறந்து கொண்டிருந்த விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனால் விமானங்களில் பயணம் செய்யக் காத்திருந்த பயணிகள் அனைவரும் குறித்த நேரத்திற்குச் செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.