Home இந்தியா ஜெயலலிதாவை ஆதரித்துத் திரையுலகினர் நாளை பிரசாரம்!  

ஜெயலலிதாவை ஆதரித்துத் திரையுலகினர் நாளை பிரசாரம்!  

531
0
SHARE
Ad

kalaiசென்னை, ஜூன் 23- ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை ஆதரித்துத் தமிழ்த் திரையுலகினர் நாளை தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்று கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

“பல்வேறு சோதனைகளைச் சாதனைகளாக்கி, வெற்றி எனும் மகுடம் சூடி, மீண்டும் அரியணை கண்டிருக்கும் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதிச் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவரது அகிலம் போற்றும் வெற்றிக்காக, தமிழ்த் திரையுலகினர் சார்பில் நாளை  மாலை 3 மணியளவில் எங்களது கலையுலகப் பிரசாரம் நடைபெறவுள்ளது.

கலையுலகத்திற்கு ஜெயலலிதா ஏராளமான நன்மைகள் செய்துள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.