Home கலை உலகம் ரூ.250 கோடி கேட்டு சல்மான்கான் மீது தயாரிப்பாளர் வழக்கு!

ரூ.250 கோடி கேட்டு சல்மான்கான் மீது தயாரிப்பாளர் வழக்கு!

647
0
SHARE
Ad

1430310225-3048புதுடெல்லி, ஜூன் 24 – சல்மான்கான் ‘வீர்’ என்ற இந்திப் படத்தில் நடித்தார். இந்தப் படத்தை விஜய்கலானி என்பவர் தயாரித்தார். சமீபத்தில் இப்படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.

இதையடுத்துச் சல்மான்கானுக்கும், தயாரிப்பாளர் விஜய் கலானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, எனக்குப் பேசியபடி சம்பளம் தரவில்லை என்று தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார் சால்மான் கான்.

இந்நிலையில், சல்மான்கானுக்கு, விஜய்கலானி ரூ.250 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக வழக்கறிஞர் மனு அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

#TamilSchoolmychoice

“வீர் படத்தைத் தயாரிக்கும்படி சல்மான்கான் என்னிடம் தெரிவித்தார். நான் சம்மதித்தேன். அதற்குச் சம்பளமாக அவருக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டது. படம் நன்றாக ஓடினால் மேலும் ரூ.15 கோடி தருவதாக ஒப்பந்தம் செய்தேன்”.

“ஆனால் படம் ஓடவில்லை. நஷ்டமடைந்து விட்டது. ஆனாலும் என் மீது அவதூறாகக் கருத்துக்களை சல்மான்கான் வெளியிட்டுள்ளார்”.

“ரூ.15 கோடி கேட்டு மிரட்டவும் செய்கிறார். இதனால் என் மனம் புண்பட்டு உள்ளது. இதற்காகவே மானநஷ்ட வழக்குத் தொடர்கிறேன்” எனத் தயாரிப்பாளர் விஜய்கலானி கூறினார்.