Home இந்தியா ரூ.8.5 கோடிக்குக் குண்டு துளைக்காத பென்ஸ் கார் வாங்கிய முகேஷ் அம்பானி!

ரூ.8.5 கோடிக்குக் குண்டு துளைக்காத பென்ஸ் கார் வாங்கிய முகேஷ் அம்பானி!

744
0
SHARE
Ad

mukwsh-ambani-benz345மும்பை, ஜூன் 24 – ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். பென்ஸ் எஸ்600 காரை வாங்கி ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குண்டு துளைக்காதபடி அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்600 காரின் விலை ரூ.1.5 கோடி தான். ஆனால் அதில் பாதுகாப்பு காரணங்களுக்காகச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் விலை அதிகரித்துள்ளது. மேலும், முகேஷ் அந்தக் காரை இறக்குமதி செய்ய 300 சதவீத இறக்குமதி வரியைச் செலுத்தியுள்ளார்.

ரூ.1.5 கோடி மதிப்புள்ள காரை அவர், ரூ.8.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். முன்னதாக அவர் கடந்த ஏப்ரல் மாதம் குண்டு துளைக்காத பிஎம்டபுள்யூ காரை ரூ.8.5 கோடிக்கு இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

2015-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது எஸ்600-வி9 பென்ஸ் கார். குண்டு துளைக்காத பென்ஸ் காரை இந்தியாவில் முகேஷிடம் மட்டுமே உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதற்காகும் செலவை அவர் அரசிடம் அளித்து வருகிறார்.