புத்ரா ஜெயா, ஜனவரி 13 – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் அரசு தரப்பின் மேல் முறையீட்டை ஏற்றுக் கொண்ட கூட்டரசு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் அதிரடிப்படை அதிகாரிகளான பெக்டர் அஸிலா ஹட்ரி, கார்ப்பரல் சைருல் அஷார் உமார் ஆகியோரின் மரண தண்டனையை மறு உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னாள் கொரூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அல்தான்துயாவின் மரணத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட இருவர் தான் காரணம் என்று கூறி நீதிபதி அரிபின் ஜகாரியா தலைமையிலான 5 உறுப்பினர்கள் குழு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 8 -ம் தேதி, அல்தான்துயா மீது சி4 என்ற வெடிப் பொருளை வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டு பின்னர் வெடி பொருள் வீசப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.