Home Featured நாடு அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு – 1)

அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு – 1)

913
0
SHARE
Ad

Najib-UMNO Assembly invitationகோலாலம்பூர்: இன்று காலை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது உரையில் தெரிவித்துள்ள சில முக்கிய அம்சங்கள், மற்றும்  கருத்துகளின் தொகுப்பு இது:-

  • நான் மலாய்க்காரர்களைக் கொண்ட அம்னோவின் தலைவராக இருக்கின்ற அதே வேளையில் பல இன- பல மதங்களைக் கொண்ட மலேசிய மக்களுக்குப் பிரதமராகவும் இருக்கின்றேன்.
  • எந்தவிதப் பிரச்சனையாக இருந்தாலும் நான் தொடர்ந்து அம்னோவின் தலைவராக இருந்து தொடர்ந்து கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வேன்
  • நான் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்தபோதிலும் நானும் மனிதன்தான். எனக்கென சில பலங்களும் உள்ளன. எனக்கென சில பலவீனங்களும் உள்ளன
  • நான் ஒரு ‘ஜென்டில்மேன்’ – என்னை வந்து பாருங்கள். பேச்சு வார்த்தை நடத்துங்கள். கட்சியை நடத்துவது குறித்து கருத்து கூறுங்கள். குறைகளைக் கூறுவதற்கு சரியான வழிமுறையைத் தேர்ந்தெடுங்கள்.
  • நான் எடுத்துக் கொண்டுள்ள பாதையையும், பணியையும் பாதியிலேயே விட்டுவிட்டு நான் ஓடிவிட மாட்டேன்.
  • 1எம்டிபி மீதான பிரச்சனைகள் எல்லாம் சுமுகமாக முடிக்கப்படும். அதற்குரிய ஏற்பாடுகளை நான் செய்து வருகின்றேன். 17 பில்லியன் விலையில் 1எம்டிபியின் சில சொத்துக்கள் விற்கப்படுவதாலும், அடுத்தடுத்து வரப்போகும் சில அறிவிப்புகளினாலும் 1 எம்டிபி பிரச்சனைகள் விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்படும்.
  • 6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எனது பதிலை துணைப் பிரதமர் வழங்கி விட்டார். அதனைப் படித்துப் பாருங்கள்.
  • நான் ஏற்கனவே கூறியுள்ளது போல், 2.6 பில்லியன் நன்கொடை 1 எம்டிபியின் பணமோ, பொதுப் பணமோ அல்ல, வெளிநாட்டிலிருந்து ஒருவர் கொடுத்த நன்கொடையாகும் அது.
  • நாட்டின் தலைமை வழக்கறிஞர் கொடுத்த அறிவுரைப்படி நான் நாடாளுமன்றத்தில் கூறியுள்ள விளக்கத்தைத் தவிர எதுவும் கூடுதலாகத் தரப் போவதில்லை.
  • எனினும், நான் சொல்வது உண்மை என்று மட்டும் என்னால் கூற முடியும். உண்மை எப்படியும் ஆதாரங்களுடன் வெளிவந்துதான் தீரும்.

-செல்லியல் தொகுப்பு

பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையுரை தொடர்பில் மேலும் படிக்க: