Home Featured இந்தியா போபால் சிறையிலிருந்து 8 தீவிரவாதிகள் தப்பினர் – இந்தியா முழுவதும் எச்சரிக்கை!

போபால் சிறையிலிருந்து 8 தீவிரவாதிகள் தப்பினர் – இந்தியா முழுவதும் எச்சரிக்கை!

993
0
SHARE
Ad

simi-bhopal-jail-759போபால் – இன்று திங்கட்கிழமை அதிகாலை போபால் சிறையிலிருந்து 8 சிமி தீவிரவாதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த 8 தீவிரவாதிகள், போபால் மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

வடஇந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அனைவரும் ஓய்வெடுக்கும் திங்கட்கிழமை அதிகாலை நேரத்தை பயன்படுத்தி சிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, தப்பிச் சென்ற தீவிரவாதிகளைப் பிடிக்கவும், நாடெங்கிலும் எச்சரிக்கை விடுக்கவும், மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

போபாலில் இருந்து 280 கி.மீ தொலைவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே போல் 7 சிமி சிறை கைதிகள் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.