Home Photo News வைரமுத்து கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சியில் சரவணன் உரை

வைரமுத்து கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சியில் சரவணன் உரை

1693
0
SHARE
Ad

திருப்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) தமிழகத்தின் திருப்பூரில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு மலேசியாவின் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணையமைச்சரும் மஇகா தேசிய உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னிலை வகித்ததோடு, சிறப்புரையும் ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன், மற்றும் கனிமொழி கருணாநிதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய பெருமகன்களை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக ‘தமிழாற்றுப் படை’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதி வரும் கவிப்பேரரசு வைரமுத்து, அந்தக் கட்டுரைகளை தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் நேரடியாக சென்று பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து, அரங்கேற்றி வருகிறார்.

#TamilSchoolmychoice

அந்த வரிசையில்தான் நேற்று மாலை திருப்பூரில் மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் குறித்துத் தான் வரைந்த கட்டுரையை வைரமுத்து அரங்கேற்றம் செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் கே.ஆர்.நாகராஜன்  தலைமை தாங்கினார். கனிமொழி வாழ்த்துரை வழங்கினார்.

அந்த நிகழ்ச்சியில் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த சரவணனுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்த வைரமுத்து, அவரைத் தனிப்பட்ட முறையிலும் சந்தித்துக் கலந்துரையாடினார்