Home நாடு டாக்டர் வத்சலா: அமைச்சின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இந்தியப் பெண்மணி!

டாக்டர் வத்சலா: அமைச்சின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இந்தியப் பெண்மணி!

1177
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் துணைத் தலைமைச் செயலாளர், டாக்டர் வத்சலா ஆர்.ஆர்.வி சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் பக்கார் அறிவித்தார்.

7 அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்கள் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

“தேசிய சீர்திருத்த முயற்சிகளுக்கு பொதுச் சேவையானது முதுகெலும்பாக அமைகிறது. ஆகவே, இந்த மாற்றங்கள் அமைச்சுகளின் உயர் மட்ட நிருவாகத்தை மேலும் பலப்படுத்துவதுடன், கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதுணையாக இருக்கும்” என வெள்ளியன்று (ஜனவரி 4) அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் முந்தையச் தலைமைச் செயலாளர் டத்தோ லோக்மான் ஹாகிம் அலி அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.