Home நாடு பினாங்கு பாலம் விபத்தில், டொயோட்டா கார் ஓட்டுனர் குற்றம் சாட்டப்பட்டார்!

பினாங்கு பாலம் விபத்தில், டொயோட்டா கார் ஓட்டுனர் குற்றம் சாட்டப்பட்டார்!

910
0
SHARE
Ad

புக்கிட் மெர்தாஜாம்: கடந்த மாதம், பினாங்கு பாலத்தின் 4-வது கிலோமீட்டரில் நடந்த சாலை விபத்தில், எஸ்யூவி ரக வாகனத்தை மோதியதாகக் கூறப்படும் டொயோட்டா வியோஸ் ரக காரின் ஓட்டுனர் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

எம். வைதீஸ்வரன், செலுத்திய டொயோட்டா வியோஸ் ரக கார், மொய் யுன் பெங் எனும் இளைஞரின் எஸ்யுவி ரக காரை, மோதியதால், கட்டுப்பாட்டை இழந்த எஸ்யூவி ரக வாகனம் கடலுக்குள் விழுந்தது. அச்சம்பவத்தில் மொய் யுன் பெங் பரிதாபமாக உயிரிழந்தார். 

1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ், வைதீஸ்வரனுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆயினும், நீதிபதி ஜமாலியா அப்துல் மனாப் முன்னிலையில் தாம் அக்குற்றத்தினை செய்யவில்லை என வைதீஸ்வரன் மறுத்தார்.

#TamilSchoolmychoice

நீதிபதி ஜமாலியா அப்துல் மனாப், வைதீஸ்வரனை 7,000 ரிங்கிட் பிணையில் ஒருவர் உத்தரவாதத்தோடு விடுவித்து, இந்த வழக்கு குறித்த விசாரணை முடியும் வரையில், அவரின் ஓட்டுனர் உரிமத்தை இரத்து செய்தார்.