Home நாடு “நாட்டின் மீது அக்கறை கொள்ளுங்கள், முன்னாள் தலைவர் மீதல்ல!”- மகாதீர்

“நாட்டின் மீது அக்கறை கொள்ளுங்கள், முன்னாள் தலைவர் மீதல்ல!”- மகாதீர்

1049
0
SHARE
Ad

புத்ராஜெயா: நாட்டின் மீது சிரத்தைக் கொண்டு சேவையாற்றும்படி அரசாங்க ஊழியர்களை பிரதமர் மகாதீர் முகமட் நினைவூட்டினார். நாட்டின் பெயரை சேதப்படுத்திய முன்னாள் தலைவர் அல்லது அரசியல் கட்சிகள் மீது தங்களின் அக்கறையைக் காட்டுவதற்குப் பதிலாக, நாட்டிற்கு நல்ல முறையில் சேவையாற்றுவதை சிந்திக்க வேண்டும் என அவர் கூறினார்.   

குறிப்பிட்ட ஒரு சில தலைவர்கள் மற்றும் கட்சிக்கு, அரசாங்க ஊழியர்கள் அக்கறைக் காட்டி வருவதை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

நாடு நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால், அரசாங்க ஊழியர்களான நாம் அவர்களுக்கு  விசுவாசமாக இருக்கலாம். ஆனால், முறைகேடு ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டால், அந்த விசுவாசம் குறிப்பிட்ட ஒரு கட்சி, தலைவர், அல்லது சித்தாந்தத்திற்கு பதிலாக, நாட்டிற்கே இருக்க வேண்டும்என அவர் தெரிவித்தார்.