Home One Line P1 தஞ்சோங் பியாய்: பெர்சாத்து வேட்பாளரை பிகேஆர் ஆதரிக்கும்!

தஞ்சோங் பியாய்: பெர்சாத்து வேட்பாளரை பிகேஆர் ஆதரிக்கும்!

579
0
SHARE
Ad
படம்: நன்றி பாஹ்மி பாட்ஸில்

கோலாலம்பூர்: நடக்க இருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளரை பிகேஆர் ஆதரிக்கும் என்று கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் கூறினார்.

கட்சியின் மத்திய தலைமை, மாதாந்திர கூட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பின்னர் பாஹ்மி  இதனை தெரிவித்தார்.

தஞ்சாங் பியாய் இடைத்தேர்தலுக்கான பெர்சாத்து கட்சிக்கான வேட்பாளரை பிகேஆர் முழுமையாக ஆதரிக்கும். பெர்சாத்து மற்றும் நம்பிக்கைக் கூட்டணி தஞ்சோங் பியாய்யில் வெற்றியைத் தக்கவைக்க தங்களது முழு தேர்தல் இயந்திரங்களையும் திரட்டும்” என்று அவர் நேற்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இடைத்தேர்தல் தேதியை தீர்மானிக்க நாளை செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் கூட இருக்கிறது. கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி டாக்டர் முகமட் பாரிட் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகி உள்ளது.