Home இந்தியா மே தினம் – முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

மே தினம் – முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

488
0
SHARE
Ad

jeyalalithaசென்னை,  மே 1- மே தினத்தை ஒட்டி, தொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

அடிமைப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட ஊமைகளாய் அடங்கிக் கிடந்த தொழிலாளர்கள், தங்களின் அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து, ஆர்ப்பரித்துப் போராடி, உரிமைகளை வென்றெடுத்ததைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் உயரிய நாளே மே தினம் எனும் உழைப்பாளர் திருநாளாகும்.

வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார். பூமியிலே வானத்து நிலவாய் சிலர் இருப்பார். அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளர் என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கிய கருத்துகளை என்றும் உள்ளத்தில் பதிய வைத்து, உழைப்பின் மேன்மையை இந்த இனிய மே தினத் திருநாளில் போற்றி பெருமிதம் கொள்வோம்.

உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக் கொண்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.