Home இந்தியா ஸ்ரீசாந்த் பணத்துக்கு ஆசைப்படுபவர் அல்ல: தாய் கண்ணீர் பேட்டி

ஸ்ரீசாந்த் பணத்துக்கு ஆசைப்படுபவர் அல்ல: தாய் கண்ணீர் பேட்டி

594
0
SHARE
Ad

திருவனந்தபுரம், ஜுன் 6- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஸ்ரீசாந்துக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் மராட்டிய மாநில அரசும் ஸ்ரீசாந்த் மீது மொக்கா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஸ்ரீசாந்த் கேரளாவைச் சேர்ந்தவர்.

sreesanth-momஅவரது தந்தை சாந்தகுமாரன் நாயர், தாய் சாவித்திரிதேவி (படம்). இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டது பற்றி அவரது தாய் சாவித்திரி தேவி கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டை உயிர் மூச்சாக கருதி இருந்தார். அவர் விளையாடும் போது மைதானத்தில் சிறு சிறு குறும்புகள் செய்வாரே தவிர வேறு எந்த மோசமான நடவடிக்கையிலும் ஈடுபட்டது இல்லை. ஸ்ரீசாந்த் கைதுக்கு பின்னால் சதி உள்ளது. அவர் பணத்துக்கு ஆசைப்படுபவர் அல்ல.

ஒரு வழக்குக்காக கூட அவர் போலீஸ் நிலையம் சென்றது கிடையாது. இந்திய அணியில் உள்ள யாருக்காகவோ அவர் இப்படி செய்துள்ளார். அவருக்காக செய்யவில்லை. ஸ்ரீசாந்துக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அவருக்கு எதிராக யாரோ சதி செய்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்த வழக்கில் போலீசாரும் பல்வேறு உண்மைகளை மறைக்கிறார்கள். ஸ்ரீசாந்துக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நீதித்துறை மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஸ்ரீசாந்தின் தந்தை சாந்த குமாரன் நாயரும் உடன் இருந்தார். அவரும் தனது மகன் தவறு செய்யவில்லை என்று கூறினார்.