Home நாடு “300 தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த 150 மில்லியன் ஒதுக்கீடு” – டாக்டர் சுப்ரா!

“300 தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த 150 மில்லியன் ஒதுக்கீடு” – டாக்டர் சுப்ரா!

535
0
SHARE
Ad

dr.subraஅலோர்காஜா, பிப்ரவரி 2 – நாடு முழுமையிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு 2013/2014 ஆம் ஆண்டில் 150 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் செய்துள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சரும், ம.இ.காவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

2013ஆம் ஆண்டுக்கு உரிய 100 மில்லியனோடு, 2014ஆம் ஆண்டுக்கான 50 மில்லியனையும் சேர்த்து, அந்த நிதி ஒதுக்கீடு சில தமிழ்ப்பள்ளிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும், வசதிகளை மேம்படுத்துவதற்கும் கூடுதல் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.

குறைந்த மாணவர் எண்ணிக்கையுடைய தோட்டப்புறத் தமிழ்ப் பள்ளிகள் வீடமைப்புப் பகுதிகளிலும், புதிய நகர்களிலும் மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, 25க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 60 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாகவும், 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 15 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாகவும் சுப்ரா விளக்கினார்.

“எந்தப் பள்ளிகளுக்கு மாற்று நிலம் ஏற்கனவே கிடைத்துவிட்டதோ அந்தப் பள்ளிகளை முதலில் முக்கியத்துவம் கொடுத்து நிர்மாணிப்பதற்கு நாங்கள் முயல்கின்றோம்” என இன்று அலோர்காஜாவில் உள்ள ரும்பியா தமிழ்ப்பள்ளியின் நிர்மாணிப்பிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது சுப்ரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வரும் பணிகளின் காரணமாக கடந்த ஆண்டில் புபிஎஸ்ஆர் தேர்வில் 1,298 மாணவர்கள் 7 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்திருக்கின்றனர் என்றும் டாக்டர் சுப்ரா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

–    பெர்னாமா