Home நாடு எம்எச் 17: எரிபொருள் சிக்கனத்திற்காக எல்லைப் பகுதியில் பறந்ததா? – லியாவ் மறுப்பு!

எம்எச் 17: எரிபொருள் சிக்கனத்திற்காக எல்லைப் பகுதியில் பறந்ததா? – லியாவ் மறுப்பு!

350
0
SHARE
Ad

MH 17 crashகோலாலம்பூர், ஜூலை 18 – கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17 குறித்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இன்று மாலை 4 மணியளவில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய், இந்த விவகாரத்தில் மலேசியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக போர் நடக்கும் ரஷ்யா – உக்ரைன் எல்லைப் பகுதி வழியான பாதையை மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 தேர்ந்தெடுத்ததா? என்ற கேள்விக்கு, லியாவ், “இல்லை” என்று மறுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் பல ஆண்டுகளாக அந்த வழியில் தான் பறந்து கொண்டிருக்கின்றது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மட்டுமல்ல, நிறைய விமானங்கள் அந்த வழியில் தான் சென்று கொண்டிருக்கின்றன” என்றும் லியாவ் பதிலளித்துள்ளார்.