Home கலை உலகம் ’ஜிகர்தண்டா’ தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்புராஜ் வழக்கு!

’ஜிகர்தண்டா’ தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்புராஜ் வழக்கு!

542
0
SHARE
Ad

IMG_0478(1)சென்னை, மே 29 – ஜிகர்தண்டா படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன், என்னை கேட்காமல் விற்க முயற்சிப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

தற்போது இந்த பிரச்சனை காரணமாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் கடிதம் ஒன்றையும் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

அக்கடித்தத்தில், “எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப் படி இந்தி மொழிமாற்று உரிமத்தில் 40% எனக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில், எஸ்.கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன்”.

#TamilSchoolmychoice

“தமிழ் நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் இந்த பிரச்சனையை பதிவு செய்தேன். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பிரச்சனையை நாலு சுவற்றுக்குள் முடிக்கலாம் என கூற பல முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆயினும் எஸ்.கதிரேசன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் போகவே சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கவில்லை”.

“எனவே இயக்குநர் சங்கத்தின் ஆலோசனையோடு வேறு வழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். சென்னை உயர் நீதிமன்றம் இப்போது படத்தின் மொழி மாற்று உரிமத்தை விற்பதற்கு தடை விதித்துள்ளனர” என தெரிவித்தார்.

11, ஜுன் 2015 வரை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த பதிப்புரிமை மீறல் புகாரின் அடிபப்டையில் எந்தவொரு விதத்திலும் இத்திரைப்படத்தின் பிற மொழி உரிமத்தை விற்கவோ, விளம்பரபடுத்தி இந்தி மற்றும் ஏனைய மொழிகளில் விற்க முயற்சிக்கவோ கூடாது என்று தடை பிறப்பித்துள்ள கடிதத்தை, தயாரிப்பாளருக்கும் அனுப்பி வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.