Home இந்தியா மருந்துக்கடைகளில் குழந்தைகள் உணவு விற்பனைக்குத் தடை!

மருந்துக்கடைகளில் குழந்தைகள் உணவு விற்பனைக்குத் தடை!

652
0
SHARE
Ad

store-2

புது டில்லி, ஜூன் 8- மருந்துக்கடைகளில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்வது பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மருந்துக்கடைகளில் உணவுப் பொருட்கள், ஊட்டச் சத்துப் பானங்கள்,தின்பண்டங்கள் போன்றவை விற்கப்படுவதால் அவை மிகவும் பாதுகாப்பானவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படுகிறது.

#TamilSchoolmychoice

அந்தத் தவறான எண்ணத்தைப் போக்க, மருந்துக்கடைகளில் விற்கப்படும் நெஸ்டம், செரலாக் போன்ற குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் ஜான்சன் அண்ட்  ஜான்சன் போன்ற குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்களை மருந்துக்கடைகளில் இருந்து அகற்றி , சாதாரணக் கடைகளில் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆகிர் கூறியதாவது:

“குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் நூடுல்ஸ் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பொருட்கள், சோப்பு வகை மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றை மருந்துக்கடைகளில் விற்கக் கூடாது என்பதே என் கருத்து.

மருந்துக்கடைகளில் விற்கப்படுவதால் அவை ஆரோக்கியம் தரும் என்று கருதியே மக்கள் வாங்குகின்றனர். எனவே, மருந்துக்கடைகளில் மருந்துப் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். இதுபோன்ற பொருட்களை விற்கக் கூடாது. அதற்குத் தடை  விதிக்க வேண்டுமென்று மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

இச்செய்தியால் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இவ்வறிக்கையால் எங்கே தமது தயாரிப்புப்  பொருட்கள் தரமற்றவை என்கிற எண்ணம் மக்கள் மத்தில் ஏற்பட்டுவிடுமோ, முழுமையான தடை வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது.

ஏனெனில்,  ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர் நாட்டையே உலுக்கிய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை முதன்முதலில் அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.