Home நாடு பாஸ் – ஜசெக பிரிவதை என் தந்தை விரும்பவில்லை – நிக் அப்டு

பாஸ் – ஜசெக பிரிவதை என் தந்தை விரும்பவில்லை – நிக் அப்டு

940
0
SHARE
Ad

Nik Mohd Abduhகோலாலம்பூர், ஜூலை 15 – பாஸ் மற்றும் ஜசெக இடையேயான அரசியல் ஒத்துழைப்பு எப்போதும் தொடர வேண்டுமென டத்தோ நிக் அசிஸ் விரும்பியதாக அவரது மகன் நிக் அப்டு தெரிவித்துள்ளார்.

ஜசெக விரும்பினால் மட்டுமே இத்தகைய பிரிவு ஏற்பட வேண்டும் என்பது தமது தந்தையின் கடைசி கோரிக்கையாக இருந்தது என்றார் நிக் அப்டு.

“பிரிவுக்கு முதலில் குரல் கொடுப்பது ஜசெகவாக இருக்க வேண்டும். மாறாக அக்கட்சியுடனான உறவை பாஸ் தன்னிச்சையாக துண்டித்துக் கொள்ளக் கூடாது என என் தந்தை அறிவுறுத்தினார். இரு கட்சிகளும் வெவ்வேறு பாதைகளில் செல்ல வேண்டியிருப்பின், அதற்கான முதல் நகர்வை ஜசெக தான் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கடைசியில் அப்படியே நடந்துள்ளது,” என்று நிக் அப்டு கூறியதாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் புதுக்கட்சி தொடங்கி இருப்பதை தாம் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், தற்போது குழப்பத்தில் இருப்பவர்கள் பாஸ் கட்சியிலேயே நீடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

“கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு புதிய தலைமைத்துவம் தீர்வு காணும் என உறுதியாக நம்புகிறேன். கட்சித் தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என புதிய தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது. புதிய தலைவர்கள் மிகுந்த அமைதியுடன் செயல்படுகிறார்கள்,” என்று நிக் அப்டு மேலும் தெரிவித்தார்.