Home Featured இந்தியா மேகி நூடுல்ஸ் தடை நீக்கம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேகி நூடுல்ஸ் தடை நீக்கம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

626
0
SHARE
Ad

magiமும்பை, ஆகஸ்ட் 13- மேகி நூடுல்ஸ்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் காரீயம்-ன் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதைத் தொடந்து நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ்க்குத் தடை விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்தத் தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இவ்வழக்கு விசாரணையின் முடிவில் , இன்று மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது.

மேலும், மேகி நூடுல்ஸின் தரம் குறித்த புதிய ஆய்வை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.