Home உலகம் இலங்கை போர்க்குற்றம்: உள்நாட்டு விசாரணையே போதும்- ஐநாவில் அமெரிக்கா திட்டவட்டம்!

இலங்கை போர்க்குற்றம்: உள்நாட்டு விசாரணையே போதும்- ஐநாவில் அமெரிக்கா திட்டவட்டம்!

658
0
SHARE
Ad

இலங்கை-போர்-குற்றங்கள்-தொடர்பான-விசாரணை-குழு-அறிக்கை-ஐ.நா.வில்-தாக்கல்ஜெனிவா – சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ஐநா சபை மனித உரிமைகள் ஆணையத்தின் 30-ஆவது கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி  நடைபெற்று வருகிறது. இக்கூட்டம், அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையம், கடந்த புதன்கிழமையன்று இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட்டது.

அவ்வறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றிருப்பது உண்மை என்றும், அதுகுறித்து அனைத்துலக நீதிமன்ற விசாரணை தேவை என்றும் கூறியிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இக்கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி அமெரிக்கா, ‘இலங்கை இறுதிப்போர் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதும்’ என்ற தீர்மானத்தைத் தாக்கல் செய்ய உள்ளது.

அமெரிக்கா தாக்கல் செய்யும் தித்தீர்மானத்தின் மீது வரும் 30ஆம் தேதி விவாதம் நடைபெறும்.

மேலும், ஐநா மனித உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை மீதான விவாதமும் நடைபெறும்.

அனைத்துத் தீர்மானத்தின் மீதானவிவாதங்கள் முடிவடைந்த பின்னர், அமெரிக்காவின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன. அவை:

“மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அனைத்துலகச்சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்

போர்க் காலத்திலும் அதன் பின்னரும் பயன்படுத்த சில சட்டங்களில் திருத்தங்களைச் செய்தல் மற்றும் ரத்து செய்தல் குறித்து இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்

13-ஆம் திருத்தச் சட்டத்தின்படி வடக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்” என்பனவாகும்.