கோலாலம்பூர் – கிழக்கு உக்ரைனில் எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து மிகப் பெரிய ஏவுகணைப் பாகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதன் படத்தை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
“வெண்ட்சுரி (Venturi) என்றழைக்கப்படும் அப்பொருள், காரைப் போன்று வாயுக்களை வெளியேற்றக் கூடியது என கூட்டு விசாரணைக் குழு (Joint Investigation Team) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டச்சு அதிகாரிகள் அந்த ஏவுகணை குறித்து ரஷியாவிடம் மேலும் தகவல்களைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு, ஜூலை மாதம் மலேசிய விமானம் எம்எச்17 -ஐ சுட்டு வீழ்த்தி அதிலிருந்த 298 பேரின் மரணத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிய அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்கு மற்றும் உக்ரைன் சொல்கிறது ரஷிய ஆதரவுப் போராளிகள் தான் ஏவுகணை அனுப்பினார்கள் என்று. ஆனால் உக்ரைன் போராளிகள் தான் எம்எச்17-ஐ வீழ்த்தியதாக ரஷியா கூறி வருகின்றது.
இந்த இரு பகுதிகளுக்கு இடையிலான பிரச்சனையில் உயிரிழந்தது என்னவோ அவ்விமானத்தில் இருந்த 298 அப்பாவி பயணிகள் தான்.