கோலாலம்பூர் – தைப்பூசக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேற்றிரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பாரம்பரிய நடைமுறைப்படி வெள்ளி இரதம் புறப்பட்டது. வழிநெடுக பக்தர்கள் குவிந்ததால், அதன் பயணம் மெதுவாகவே நடந்தது. தலைநகர் ஜாலான் ஈப்போ 4-வது மைல் பகுதிக்கு வெள்ளி இரதம் வந்தடைந்தபோது காலை 8.30 மணியாகிவிட்டது.
வழக்கமாக இந்தப் பகுதியை வெள்ளி இரதம் அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் கடந்து விடும் என வழக்கமாக இரதத்துடன் நடக்கும் பக்தர்கள் சிலர் செல்லியலிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையில் பத்துமலை தைப்பூசமும் களைகட்டத் தொடங்கியுள்ளது. பக்தர்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர். காவடிகளும் கடந்த சில நாட்களாகவே வரத் தொடங்கி விட்டன.
-செல்லியல் தொகுப்பு