கோலாலம்பூர் – தைப்பூசக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேற்றிரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பாரம்பரிய நடைமுறைப்படி வெள்ளி இரதம் புறப்பட்டது. வழிநெடுக பக்தர்கள் குவிந்ததால், அதன் பயணம் மெதுவாகவே நடந்தது. தலைநகர் ஜாலான் ஈப்போ 4-வது மைல் பகுதிக்கு வெள்ளி இரதம் வந்தடைந்தபோது காலை 8.30 மணியாகிவிட்டது.
வழக்கமாக இந்தப் பகுதியை வெள்ளி இரதம் அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் கடந்து விடும் என வழக்கமாக இரதத்துடன் நடக்கும் பக்தர்கள் சிலர் செல்லியலிடம் தெரிவித்தனர்.
வெள்ளி இரதம் ஜாலான் ஈப்போ 4-வது மைல் பகுதியைக் கடந்த போது…
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து நேற்றிரவு புறப்படத் தயாராகும் வெள்ளி இரதத்திற்கும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கும் பூஜைகள் நடத்தப்படுகின்றன…. ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா முன்னிலையில்…(படம்: நன்றி இராமன் குட்டி)
வெள்ளி இரதம் புறப்படும் வேளையில் மகா மாரியம்மன் ஆலயத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம் (படம்: நன்றி இராமன் குட்டி)
இதற்கிடையில் பத்துமலை தைப்பூசமும் களைகட்டத் தொடங்கியுள்ளது. பக்தர்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர். காவடிகளும் கடந்த சில நாட்களாகவே வரத் தொடங்கி விட்டன.
இன்று புதன்கிழமை காலை பத்துமலை திருத்தலத்தின் காட்சி…
பத்துமலைத் தைப்பூசத்திற்கு வருகை தந்த சிறுமிகளில் இருவர் (படம்: நன்றி -இராமன் குட்டி)
பத்துமலை திருத்தலத்தில் இன்று புதன்கிழமை காலை வலம் வந்த காவடிகளில் ஒன்று …
-செல்லியல் தொகுப்பு