Home நாடு கோலாலம்பூர் வீதிகளில் வியாழக்கிழமை தங்க இரதம் ஊர்வலம்

கோலாலம்பூர் வீதிகளில் வியாழக்கிழமை தங்க இரதம் ஊர்வலம்

1631
0
SHARE
Ad

vinayagar-kortumalaiகோலாலம்பூர் –  மலேசியாவின் தாய்க் கோவிலான ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவராக பல்லாண்டு காலமாக செயல்பட்டு வரும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின் தலைமைத்துவத்தின் மற்றொரு சாதனையாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு தங்க இரத ஊர்வலம் நடைபெறுகின்றது.

சுமார் 5 மில்லியன் ரிங்கிட் செலவில் மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் மிக நுணுக்கமாகவும், அழகாகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்க இரதம் தற்போது பத்துமலையில் வீற்றிருக்கிறது.

golden chariot-kortumalaiநாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை பத்து மணிக்கு இந்த தங்க இரதத்தின் வெள்ளோட்டத்தை மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், தெற்கு ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தொடக்கி வைக்கிறார்.

#TamilSchoolmychoice

மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா  இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் கொடியேற்றி வைக்கிறார்.

பின்னர் கோலாலம்பூர் வீதிகளில் உலா வரும் தங்க இரதம், கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு வந்தடையும்.

வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 25-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதன் முறையாக தங்கத்திலான விநாயகர் உற்சவ மூர்த்தியாக தங்க இரதத்தில் தலைநகரின் வீதிகளில் உலா வருவார்.

தலைநகரைச் சுற்றியுள்ள இந்துப் பெருமக்களுக்கு இந்தத் தேரோட்டம் பக்தி மயமான ஊர்வலமாகத் திகழும் அதே வேளையில், ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் நிகழ்ச்சியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nadarajah-tansri-டான்ஸ்ரீ நடராஜா (படம்) தலைமைத்துவத்தில் பத்துமலைத் திருத்தலத்தில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளும், மேம்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கோர்ட்டுமலை விநாயகர் ஆலயம் முற்றிலும் கருங்கல் பதிக்கப்பட்ட ஆலயமாக உருவாகியிருக்கும் சாதனையோடு, முதன் முதலாக கோலாலம்பூர் வீதிகளில் தங்க இரதம் உலா வரும் சாதனையும் நிகழ்த்தப்பட்டிருப்பதால், இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வரலாற்றுபூர்வமானதாகவும் கருதப்படுகிறது.