Home நாடு மஇகா தொடங்கப்பட்ட அதே இடத்தில் “உரிமை” கட்சி தொடக்க விழா

மஇகா தொடங்கப்பட்ட அதே இடத்தில் “உரிமை” கட்சி தொடக்க விழா

792
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் பேராசிரியர் பி.இராமசாமியின் ‘உரிமை’ கட்சியின் தொடக்க விழா இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், விதிவசத்தால் 1946-ஆம் ஆண்டில் நம் நாட்டில் இந்திய சமுதாயத்தின் உரிமைப் போராட்டத்திற்காகத் தொடங்கப்பட்ட மலேசிய இந்தியர் காங்கிரஸ் அரசியல் கட்சி எந்த இடத்தில் தொடங்கப்பட்டதோ அதே இடத்தில்தான் ‘உரிமை’ கட்சியும் தொடங்கப்படுகிறது.

1946-ஆம் ஆண்டில் முதன் முதலாக ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில்தான் மஇகா தொடங்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் சந்திப்புக் கூட்டங்களும் நடைபெறத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆகஸ்ட் முதல் வாரத்தில் செந்துல் செட்டியார்கள் மண்டபத்தில் அனைத்து இந்திய இயக்கங்களின் மாபெரும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்று, முறையாக மஇகாவும் தோற்றுவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இறுதி நேரத்தில் டெம்பல் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் ‘உரிமை’ கூட்டம் நடைபெறுவதற்கான மண்டப அனுமதியை ரத்து செய்ததால் அந்தக் கூட்டம் தற்போது ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.