Home நாடு “நஜிப்-டிரம்ப் சந்திப்பு – மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்” மகாதீர் சாடல்

“நஜிப்-டிரம்ப் சந்திப்பு – மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்” மகாதீர் சாடல்

1133
0
SHARE
Ad

najib-mahathirகோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பின் அமெரிக்க வருகையின்போது அவருக்கும் டிரம்புக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து மலேசியர்கள் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள் என துன் மகாதீர் சாடியிருக்கிறார்.

நஜிப்-டிரம்ப் இடையிலான சந்திப்பு தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. “நஜிப்புக்கு வெள்ளை மாளிகையில் முறையான மரியாதைகள் வழங்கப்படவில்லை. அவருக்கு அதிகாரபூர்வ வரவேற்பு எதுவும் வழங்கப்படவில்லை. அவருக்கென விருந்துபசரிப்புகளும் நடத்தப்படவில்லை” என்றும் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

najib-trump-us visit-13092017 (5)பணக்கார நாடான அமெரிக்காவின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக மலேசியா நிதி வழங்குவது என்பது பணக்காரர்களுக்கு ஏழைகள் எப்படி உதவ முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் என்றும் மகாதீர் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நாடு முழுமையிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களின் சேமநிதி வாரியப் பணம் அமெரிக்காவில் முதலீடு செய்யப்படுவது குறித்து நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள் என்றும் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியா ஏர்லைன்ஸ் இலாபகரமாக நடக்கும் ஒரு நிறுவனமல்ல என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கும் மகாதீர், அமெரிக்காவில் செய்யப்படும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு மீண்டும் நமது கண்ணில் காட்டப்படுமா அல்லது 1எம்டிபி முதலீட்டுப் பணம் போல காணாமல் போய்விடுமா என்றும் மகாதீர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.